Monday, 11 November 2013

HINDUISM OUR BRAND

சோழர் காலத்துக்கு உரிய சைவ ஆலயம் ஒன்றின் சிதைவுகள் அகழ்வு ஆராய்ச்சி நிபுணர்களால் இந்தோனேசியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என அறியப்படுகிறது.

சிவபெருமான், விநாயகர் ஆகியோரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலயத்தை ஒத்த ஆலயங்கள் இதற்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை.

இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என நிபுணர்கள் விளக்கம் தருகின்றார்கள்.
 ...................................................................................................................................................................................................................................................................

தெரிந்துகொள்வோம் :

கோயில்களில் தீபாராதனை காட்டுவது ஏன்?

கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் செய்யப்படுகின்றன. கற்பூரம் கடைசிவரை எரிந்து போகும். எதுவுமே மிஞ்சாது. மனிதன் இறந்தபிறகும் இதே நிலைமைதான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டுகிறார்கள். எனவே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது.

மேலும் கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது. இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும். அதை பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு. கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது.

 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பல்வேறு ஆராயச்சுகள் செய்து நவகிரகங்கள் இருக்கிறது என்று கண்டறிந்தான் வெள்ளைக்காரன், அவன் கண்டறியும் பல காலத்துக்கு முன்னரே கோவிலில் நவகிரகத்தை வழிபட்டு, பூமியை போல் இன்னம் இட்டு கிரகங்கள் உள்ளன என்று சொல்லாமல் சொல்லிவிட்டான் தமிழன்.

தமிழனாய் பிறந்ததற்கு பெருமைப்படு தமிழா...

No comments:

Post a Comment